வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | அம்மாவை நேசி!!!பெரியார் வாழ்க | தமிழ் வாழ்க!!!

Sunday, September 5, 2010

லினக்ஸ்-மிண்ட் 9-ல் ஒபேரா,vlc, கூகுல் குரோம்,பிக்காசா மற்றும் பல பயனுள்ள மென்பொருள்களை எவ்வாறு நிறுவுவது?

 


நாம் விண்டோஸ்-ல் ஏராழமான  மென்பொருள்களை  மிக எளிதில் நிறுவி விடுகிறோம் ஆனால் லினக்ஸ்-ஐ பொறுத்தவரை லினக்ஸ் இயங்கு தளத்தில் மென்பொருள்களை நிறுவது என்பது கொஞ்சம் கட்டினம்தான்.
அதனால் தான் லினக்ஸ் இன்னும்  மக்களிடையே (முழுதாக) சென்றடையவில்லை.லினக்ஸ் மிண்ட்9-எல் உபுண்டு-வைவிட சில வசதிகள் அதிகமாக உள்ளன.அதாவது உபுண்டுவைவிட மிண்ட்-ஐ எளிதாக பயன்படுத்தலாம்.



நாம் இப்பொழுது மிண்ட்9-ல் ஒபேரா,vlc,குரோம் உலாவி,பிக்காசா போன்ற மென்பொருள்களை நிறுவதெப்படி என்று பார்ப்போம்.


                                                                                    படம்.1
முதலில் படம்  1-ல் காட்டபட்டது போல் மெனு-ஐ click செய்யவும்.

                                                                              படம்.2
இதில் படம் 2-ல் உள்ளவாறு system/software manager-ஐ click செய்யவும்.click செய்தவுடன் பின்வரும் திரை தோன்றும்.

                                                                             படம்.3

இதில் internet என்ற option-ஐ click செய்தால் பின்வரும் திரை தென்படும்.

                                                                           படம்.4

இதில் ஏராளமான மென்பொருள்கள் வரிசையாக இருக்கும் sound&video என்ற option-ஐ தெரிவு செய்தால் vlc,gnome, மற்றும் games என்ற option-ஐ select செய்தால் பின் வரும் திரை தோன்றும்.



                                                                         
படம்.5

இதில் install என்ற option-ஐ click செய்தால் போதும் தானே அந்த மென்பொருள் download ஆகி இன்ஸ்டால் ஆகிவிடும்.

குறிப்பு: இந்த மென்பொருள்கள் அனைத்தும் download ஆனபிறகே இன்ஸ்டால் ஆகும் எனவே இணயதள இணைப்பு தேவை.

 மாறாக இதில் நாம்  மென்பொருளின் பெயரை search செய்தாலும் கூட அந்த மென்பொருள்  அதில்  இருந்தால் வந்துவிடும் உதாரணமாக vlc,picasa என்று search செய்தால் பின்வரும் திரை தோன்றும் அதை click செய்தும் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

                   படம்.6

படம்.7


பின்னர் பின்வரும் திரை தோன்றும்.

            படம்.8

படம்.8-ஐ பாருங்கள் இதில் vlc,குரோம்,picasa,ஒபேரா போன்றவற்றின் icon தெரிகிறதா? இந்த icon-கள் விண்டோஸ்-ல் வருவதைப்போல் வராது நாமேதான் all programs-ல் சென்று  ADD to desktop செய்துகொள்ளவேண்டும்.

இதில் மொத்தம் 30290 program-களின் தொகுப்புகள்  உள்ளன.

3 comments: